4 பேர் கைது ஆற்றுக்குள் செல்லும் வழியில்
1/19/2020 1:49:12 AM
கொள்ளிடம்,ஜன,19: கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் மணல் திருட்டை தடுக்க ஆற்றுக்குள் செல்லும் வழியில் பள்ளம் தோண்டி தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழியை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று வர சாலை உள்ளது. இந்த சாலையின் வழியே கிராம மக்கள் ஆற்றுக்குள் சென்று நீராடி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்த பிறகும் இந்த வழியே ஆற்றுக்குள் சென்று நீராடி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு இந்த வழியாகத்தான் விவசாயிகள் ஓட்டிக்கொண்டு செல்கின்றனர். பொதுவாக மாதிரவேளூர் கிராம மக்கள் ஆற்றுக்குள் செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த சாலையைப் பயன்படுத்தி சிலர் இரவு நேரங்களில் 10 டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று மணல் கடத்தி வந்தனர். இதனால் 300 மீட்டர் சாலை சேறும் சகதியாக மாறியது. இதனால் மயானத்திற்கு செல்வோர்களும், கொள்ளிடம் ஆற்றுக்குள் செல்வோர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் காமராஜ் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று பொதுமக்கள் சார்பில் மாதிரவேளூர் ஊராட்சியின் சார்பில் சாலையில் 300 மீட்டர் தூரத்துக்கு பள்ளமாக உள்ள இடங்களில் மண் போடபப்பட்டு பள்ளம் சரி செய்யப்பட்டது. மேலும் ஆற்றுக்குள் மணல் திருட வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலையின் குறுக்கே பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று முன்தினம் 16 அடி அகலத்திற்கு 4 அடி ஆழத்திற்கும் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் ஆற்றுக்குள் மணல் திருட வாகனங்கள் செல்ல முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கிய 4 மீனவர்கள் கரை திரும்பினர்
மயிலாடுதுறை நகரில் சாலையில் தொடர்ந்து ஏற்படும் மெகா பள்ளம்
வேளாங்கண்ணி சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
300 பேர் கைது கோயில்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனைக்கு அனுமதிக்க வேண்டும் சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் வலியுறுத்தல்