வாடகை வசூலிக்க சென்ற பெண்ணை தாக்கிய கடைக்காரர் கைது
1/19/2020 1:48:27 AM
வேதாரண்யம், ஜன.19: வேதாரண்யத்தை சேர்ந்த சண்முகம் இவரது மனைவி தேவிகா (38). இவருக்கு சொந்தமான கடையில் வேதாரண்யத்தை சேர்ந்த கண்ணன் (52) என்பவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். நேற்று வாடகை வசூல் செய்ய சென்ற தேவிகாவிற்கும் வாடகைக்கு கடை வைத்திருக்கும் கண்ணன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தேவிகாவை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவிகா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கிய 4 மீனவர்கள் கரை திரும்பினர்
மயிலாடுதுறை நகரில் சாலையில் தொடர்ந்து ஏற்படும் மெகா பள்ளம்
வேளாங்கண்ணி சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
300 பேர் கைது கோயில்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனைக்கு அனுமதிக்க வேண்டும் சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் வலியுறுத்தல்