19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
1/14/2020 4:55:33 AM
கோவை, ஜன. 14: கோவை மாவட்டத்தில் தீவிர போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் வரும் 19ம் தேதி நக்கிறது. கடந்த ஆண் 3.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. இந்த ஆண்டு 3.34 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1202 மையங்கள், நகர்புறங்களில் 379 மையங்கள் என மொத்தம் 1,581 மையங்கள் அமைக்கப்படுகிறது. மேலும், பேருந்துநிலையம், ரயில்நிலையம், விமானநிலையம், கோயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 36 மையங்கள் மற்றும் 18 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்படுகிறது. முகாமிற்கு தேவையான சொட்டு மருந்துகள் அனைத்தும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இப்பணியில், சுகாதாரத்துறை அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் என 6 ஆயிரத்து 536 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். இந்த சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. இதன் மூலம் எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது. எனவே, அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு, ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் வரும் 19ம் தேதி தவறலாமல் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சாலைப்பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்க வேண்டும்
காசோலையில் போலி கையெழுத்திட்டு வங்கியில் ரூ.3.76 லட்சம் மோசடி
கோவையில் ஜன. 20-ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை அரசு மருத்துவமனையில் தொழிலாளிக்கு செயற்கை கால் பொருத்தம்
ஓய்வூதியம் முறையாக வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை
ஸ்டீல் விலை விவகாரம் சி.பி.ஐ. விசாரிக்க கான்ட்ராக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்