SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வத்தலக்குண்டு நடகோட்டையில் குறைந்த வாக்கு பெற்றவருக்கு துணை தலைவர் பதவி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

1/14/2020 2:24:57 AM

திண்டுக்கல், ஜன. 14: வத்தலக்குண்டு நடகோட்டையில் குறைந்த வாக்கு பெற்றவருக்கு துணை தலைவர் வெற்றியை அறிவித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், நடகோட்டை ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 9 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தனலட்சுமி என்பவர் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். தனலட்சுமிக்கு 9 வார்டு உறுப்பினர்களில் 6 பேர் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட கீதாவுக்கு 3 பேர் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் தேர்தல் நடத்திய அதிகாரி ரஞ்சிதா, வாக்குச்சீட்டுகளை மாற்றி கீதா வெற்றி பெற்றதாக அறிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனலட்சுமி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘தேர்தல் அதிகாரியின் மோசடி காரணமாக துணை தலைவர் தேர்தலில் தோற்று விட்டேன். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடந்த துணை தலைவர் தேர்தலை ரத்து செய்து விட்டு மீண்டும் துணை தலைவர் தேர்தலை நடத்த வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் செல்வேன்’ என கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

  • biharele28

    கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

  • pakistanbomb27

    பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

  • bee27

    6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்