பெருங்குடி மண்டலத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை
1/14/2020 1:06:48 AM
துரைப்பாக்கம்: பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பெருங்குடி அண்ணா சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 7 வாடகைதாரர்கள் இந்த கடைகளுக்கு கடந்த 8 மாதம் முதல் ஒன்றரை ஆண்டு வரை 7.12 லட்சம் வாடகை செலுத்தவில்லை, என கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் வாடகை பாக்கியை செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில் மண்டல உதவி கமிஷனர் பாஸ்கர் உத்தரவின்படி, வருவாய் உதவி அலுவலர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சம்பவ இடத்துக்கு வந்து, வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர். இதையடுத்து, 4 கடைக்கார்கள் மட்டும் தங்களது வாடகை பாக்கி தொகையாக ரூ.5.51 லட்சத்தை செலுத்தினர். இதையடுத்து, வாடகை செலுத்தாக 3 கடைகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர். இந்த சம்பவத்தின் போது அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க துரைப்பாக்கம் போலீசர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் செய்திகள்
பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
கோயில் பூசாரி தற்கொலை
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்