பைக் மீது டிப்பர் லாரி மோதி எஸ்ஐ மகன் பரிதாப பலி: 2 பேர் படுகாயம்
1/14/2020 1:06:35 AM
திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர். ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நிதிஷ்குமார் (21). அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து நிதிஷ்குமார் மற்றும் சக அலுவலர்கள் யாசர் அராபத் (21), சிவா (21) ஆகியோர் ஒரே பைக்கில் மாதவரம் நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்கு புறப்பட்டனர்.
மாதவரம் கனகசத்திரம் அருகே வந்தபோது, இடது புறத்திலிருந்து திரும்பிய டிப்பர் லாரி திடீரென பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய 3 பேரும் பைக்குடன் கீழே விழுந்தனர்.
அப்போது நிதிஷ்குமார் மீது லாரியின் சக்கரம் ஏறி, இறங்கியது. மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர். இதை பார்த்த சக வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நிதிஷ்குமார் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
கோயில் பூசாரி தற்கொலை
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்