தெத்தி ஊராட்சி மன்ற தலைவராக பெண் வேட்பாளர் ராஜ வெற்றி
1/3/2020 2:23:11 AM
நாகை,ஜன.3:நாகை ஊராட்சி ஒன்றியம் தெத்தி ஊராட்சி மன்ற தலைவராக வேட்பாளர் ராஜ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால் முறைகேடு நடந்ததாக மீண்டும் வாக்குகளை எண்ணக்கோரி திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாகை ஊராட்சி ஒன்றியம் தெத்தி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக கட்சியை சேர்ந்த தமயேந்தி, அதிமுக கட்சியை சேர்ந்த ராஜ ஆகியோர் போட்டியிட்டனர். இந்த பகுதியில் பதிவான 1,806 வாக்குகள் 3 வாக்குபெட்டிகளில் இருந்தது.நேற்று வாக்கு எண்ணும் போது 2 பெட்டிகளில் பதிவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டது. எஞ்சியுள்ள 1வது பெட்டி குறித்து தமயேந்தி முகவர்கள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டார். அப்போது பெட்டியை தேடும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.சுமார் 1மணி நேரத்திற்கு பின்னர் அந்த பெட்டியில் இருந்த வாக்குகள் வேறு ஒரு அறையில் வைத்து ஏற்கனவே எண்ணப்பட்டு விட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் தெத்தி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜ 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்து விட்டனர்.இதையடுத்து வேட்பாளர் தமயேந்தி மற்றும் அவர்களது ஏஜெண்டுகள் மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டனர். இதற்கு 10 வாக்குகள் வித்தியாசம் இருந்தால் மட்டுமே மீண்டும் எண்ணப்படும். 32 வாக்குகள் வித்தியாசமாக இருப்பதால் எண்ண முடியாது என்று தெரிவித்தனர்.வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்து விட்டதாக கூறி தமயேந்தி மற்றும் திமுகவினர் வாக்கு எண்ணும் மையம் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த டிஎஸ்பி முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா
தேர்தல் நடத்தை விதிமுறை அமலால் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
சட்டமன்ற தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம்
திமுக ஆலோசனை கூட்டம்
கதிர் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி டிரைவர் கை துண்டானது
காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்