மாவட்ட இறகுபந்து பழநி அக்சயா பள்ளி வெற்றி
12/13/2019 1:55:05 AM
பழநி, டிச. 13: மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் பழநி அக்சயா பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பழநி அக்சயா அகாடமி பள்ளி வளாகத்தில் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். அக்சயா அகாடமி பள்ளி தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். செயலர் பட்டாபிராமன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் காயத்ரி வரவேற்று பேசினார். பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில் பழநி அக்சயா பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஹர்ஷிதா, குணவர்த்தினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பழநி டிஎஸ்பி விவேகானந்தன் பரிசுகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தைப்பூச திருவிழா பழநியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி ஆய்வு
கொடைக்கானல் அப்சர்வேட்டரி நீர்த்தேக்கத்தில் கிடப்பில் கிடக்கும் உபரி நீர் சேமிப்பு தடுப்பணை கட்டும் பணி எப்போது துவங்கும்?
சர்வர் பழுதால் சரிவர இயங்கவில்லை பயோ மெட்ரிக் மிஷின்களை ஒப்படைக்கும் போராட்டம்
ரெட்டியார்சத்திரம் அரண்மனைபுதூரில் ரயில்வே சப்வேயை கோட்ட மேலாளர் ஆய்வு
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் திமுக வெற்றி பெறும் முன்னாள் மாணவர் பேரவை தலைவர் பேட்டி
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!