கணியம்பாடி அருகே ஆசிரியர் இடம் மாறுதலை வாபஸ் பெற வேண்டும்
12/13/2019 12:09:19 AM
வேலூர், டிச.13: கணியம்பாடி அருகே அரசு ஆசிரியர் இடமாறுதலை வாபஸ் பெற வேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று மனு அளித்தனர். கணியம்பாடி ஒன்றியம் நஞ்சுகொண்டாபுரம் பகுதி மக்கள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை 92 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ராமமூர்த்தி என்ற ஆசிரியரை துத்திக்காடு நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். எங்கள் பகுதி அருகே உள்ள மேதல்பாடி, வேப்பம்பட்டு, கம்மவான்பேட்டை, காட்டுப்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வெறும் 5 முதல் 6 மாணவ, மாணவிகள் மட்டுமே படிக்கின்றனர். ஆனால் அங்கெல்லாம் 2 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் 92 மாணவர்கள் படிக்கும் எங்கள் பகுதியில் தற்போது 4 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது. எனவே இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ராமமூர்த்தியை மீண்டும் எங்கள் பகுதி பள்ளிக்கே நியமிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை 47 பேர் கைது
காணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்
பாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி
போலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்' நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்