உள்ளாட்சி தேர்தலுக்கு 2வது நாளில் 72பேர் வேட்புமனு தாக்கல்
12/11/2019 2:14:35 AM
தர்மபுரி, டிச.11: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 2வது நாளில் விறுவிறுப்பாக, 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சியும், 10 பேரூராட்சிகளும், ஊராட்சி ஒன்றியம் 10ம், கிராம ஊராட்சிகள் 251 உள்ளன. தர்மபுரி நகராட்சியில் 33 உறுப்பினர்களும், 10 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து, 18 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவியும், 10 ஊராட்சி ஒன்றியங்களில் 188 வார்டு உறுப்பினர்கள் பதவியும், 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகளுக்கும், 251 கிராம ஊராட்சி வார்டுகளில் இருந்து 2,343 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் மொத்தம் 107 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 2வது நாளான நேற்று தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட உங்கரானஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். நேற்று மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 4பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேரும், கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 63 பேரும் என 72 பேர் மனு தாக்கல் செய்தனர். இதன்படி நேற்று வரை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 6 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 162 பேருமாக, இதுவரை 179 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மது, குட்கா விற்ற 63பேர் கைது 400 மதுபாட்டில்கள் பறிமுதல்
காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
10,583 பேருக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் துவக்கி வைத்தார்
38 இடங்களில் எருதாட்டம் 100 காளைகள் பங்கேற்பு
ஞானதேசிகனுக்கு அஞ்சலி
வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்