சாக்கடை கால்வாய் மீது சிமென்ட் பலகை அமைக்க கோரிக்கை
12/11/2019 2:10:08 AM
காங்கயம், டிச. 11:காங்கயத்தில் சாக்கடைக் கால்வாய் மீது சிமென்ட் பலகை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் நகராட்சி, கோவை சாலையில் உள்ள அகஸ்திலிங்கம்பாளையம் பகுதியில் கழிவு நீர் செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அகலமான கழிவு நீர் கால்வாயின் மீது சிமென்ட் பலகை அமைக்காததால், இங்கு குடியிருக்கும் மக்கள் துர்நாற்றத்தோடும், கொசு தொல்லைக்கும் ஆளாகி வருகின்றனர். மேலும், இந்த கால்வாயை கடந்து அவர்களது வீட்டு வாசலுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ஆங்காங்கே கிடக்கும் தகரம், மரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து சாக்கடைக் கால்வாயின் மீது போட்டு, நடந்து வருகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் மீது சொந்தமாக சிமென்ட் பலகை அமைப்பதற்கு அப்பகுதி மக்களுக்கு பொருளாதார வசதி இல்லாததால், சாக்கடை கால்வாய் மீது சிமென்ட் பலகை அமைக்க காங்கயம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மு.க.ஸ்டாலினிடம் சக்கர நாற்காலி கேட்டவருக்கு ஓரிரு நாளில் வழங்கப்படும்
அங்கன்வாடி ஊழியர்கள் 3ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
செயற்கை இழை ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்
குப்பை லாரி மோதி பலியான தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.2.12 லட்சம் நிதி உதவி
“மாகாளியம்மன் பாரத் கேஸ்” சிலிண்டர்களின் புதிய விநியோக நிறுவனம் துவக்கம்
4ம் குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி ஜரூர்
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்