உள்ளாட்சி 2ம் கட்ட தேர்தல் ஊராட்சி ஒன்றியங்கள் விபரம் வெளியீடு
12/11/2019 2:00:29 AM
ஈரோடு, டிச.11: ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்டத்தில் எந்தெந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டங்களாக ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஊராட்சி ஒன்றியங்கள் விபரம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக வரும் 30ம் தேதி அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானிசாகர், சென்னிமலை, பெருந்துறை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப்பகுதி உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.இதில் 1,203 ஊராட்சி கவுன்சிலர், 130 ஊராட்சி தலைவர் 104 ஒன்றிய கவுன்சிலர், 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. வாக்குபதிவானது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறி உள்ளார்.
மேலும் செய்திகள்
பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம்
மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
வ.உ.சி. பூங்காவிற்குள் செல்ல தடை காணும் பொங்கல் கொண்டாட வந்த பெண்கள் ஏமாற்றம்
மது, லாட்டரி விற்ற 11பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது
தொழிலதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கு மாஜி போலீஸ் உட்பட 2 பேர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்