பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
12/11/2019 1:58:50 AM
அந்தியூர், டிச.11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பழங்குடியின மக்கள் மற்றும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர், பர்கூர் மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் புகார்களை பர்கூர் காவல்துறையினர் பதிவு செய்ய மறுக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்கூரில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பூர்வீக பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு செய்யப்படும்போது, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை. மேலும், மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு அரசின் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. அரசின் சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள்
8 சட்டமன்ற தொகுதிகளில் மாவட்டத்தில் 19.57 லட்சம் வாக்காளர்கள்
629 முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி
மாவட்டத்தில் 6 அரசு பள்ளிகள் தரம் உயர்வு
ஈரோடு மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட 13 பைக்குகள் இன்று ஏலம்
கன்னட அமைப்பினர் சேதப்படுத்திய பெயர் பலகைகள் தமிழக எல்லைக்குள் நடும் பணி தீவிரம்
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக குடியரசு தினத்தில் ஈரோட்டில் விவசாயிகள் வாகன பேரணி
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!