வேலூர் லாங்கு பஜாரில் உள்ள வெங்காய கிடங்குகளில் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை
12/11/2019 12:37:46 AM
வேலூர், டிச.11: வேலூர் லாங்கு பஜாரில் உள்ள வெங்காயம் இருப்பு வைக்கும் கிடங்குகளில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
உணவுப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள வெங்காயம் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. பெல்லாரி, ரெட்ரூபி வகை வெங்காயம் தமிழகம் முழுவதும் லாரிகள் மூலமாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. மழைநீர் வெள்ளத்தில் வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனிடையே வெங்காயம் பயிரிட்ட மற்ற விவசாயிகள் வெங்காயத்தை அவசர அவசரமாக மூட்டை கட்டி அண்டை மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைத்தனர். இதனால் லாரியில் கொண்டு வரப்பட்ட வெங்காயம் அழுகி வீணானது.
நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழகத்திலும் வெங்காயம் தட்டுப்பாடு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. வீடுகள் முதல் உணவங்கள் வரை உணவு தயாரிக்கும் பணி முடங்கியது. வெங்காயத் தேவை அதிகரித்து வருவதை கண்ட வியாபாரிகள் சிலர் வெங்காய மூட்டைகளை பதுக்கி வைத்தனர். இதனால் வெங்காயத்தின் விலை இரட்டை சதம் அடித்து ஒரு கிலோ ₹200 வரை விற்பனை செய்யப்பட்டது. வெங்காய தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு சார்பில், எகிப்தில் இருந்து வெங்காயம் நேற்று இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் வெங்காய மொத்த விற்பனை கிடங்குகள் மற்றம் கடைகளில் வெங்காயம் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் 33 குழுக்கள் அமைத்து 40 இடங்களில் வெங்காயம் இருப்பு வைக்கும் கிடங்குகளில் சோதனை நடந்தது.
அதன்படி வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், எஸ்ஐ முத்துச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று காலை லாங்கு பஜார், நேதாஜி மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகள், குடோன்களில் வெங்காயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என திடீர் சோதனை நடத்தினர். அப்போது, எத்தனை லோடு வெங்காயம் வந்துள்ளது. எவ்வளவு இருப்பு உள்ளது? என வியாபாரிகளிடம் கேட்டறிந்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், நேற்று முன்தினம் 50 கிலோ வெங்காய மூட்டை ₹7,500க்கு விற்ற நிலையில் நேற்று ₹6,500க்கு விற்பனையானது. சில்லரை விற்பனையில ₹100 முதல் ₹140 வரை வெங்காயம் விற்கப்படுகிறது. வெங்காயத்தை யாராவது பதுக்கி வைத்துள்ளார்களா? என சோதனை நடந்தது. வெங்காயத்தை பதுக்குவோர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும், மேலும், அபராதம் வசூலிக்கப்படும். வெங்காயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
மேலும் செய்திகள்
அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்
பாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி
போலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்' நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி
அணைக்கட்டு தாலுகாவில் காளைவிடும் விழா ஏற்பாடுகள் தீவிரம் அதிகாரிகள் ஆய்வு
மணல் கடத்திய வாலிபருக்கு வலை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்