SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பெண் உள்பட 2 பேர் படுகாயம்: n சிமென்ட் சாலை சேதம் n வீடுகள் அதிர்ந்தன

12/11/2019 12:23:37 AM

சென்னை: செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு ராணுவம், ரயில்வே துறை, தமிழக காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின்போது பயன்படுத்திய வெடிபொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் அனுமந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விழுந்து கிடக்கும். இதையொட்டி கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை துப்பாக்கி பயிற்சி நடந்தது. இந்நிலையில், அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (47). நேற்று மதியம் இவர், புளியந்தோப்பு தெரு வழியாக பயிற்சி மையத்தில் வெடிக்காத ஒரு வெடி பொருளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பைக்கில் இருந்து கீழே விழுந்த வெடி பொருள் பயங்கர சத்தத்துடன்  வெடித்தது. இதில் ராமகிருஷ்ணனின், வலது காலில் படுகாயம் ஏற்பட்டு, அவர்  கீழே விழுந்தார்.

வெடி வெடித்ததில் அங்குள்ள வீட்டின் வாசலில் துணி சலவை செய்து கொண்டிருந்த கோவிந்தம்மாள் (60) என்பவருக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர், மயக்கமடைந்தார். அதேநேரத்தில், அவ்வழியாக சென்ற பசுமாடு படுகாயமடைந்தது. அங்கிருந்த ஓட்டு வீடு சேதமானது. இரும்பு மின் கம்பத்தில் பெரிய துளை விழுந்தது. சிமென்ட் சாலை விரிசல் அடைந்தது.தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதைதொடர்ந்து எஸ்பி கண்ணன், திருப்போரூர் தாசில்தார் செந்தில்குமார், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடித்த பொருளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தம்மாளுக்கு மார்பு பகுதியில்  பெரிய துளை விழுந்துள்ளது. அந்த வெடி மருந்து உள்ளே சென்று உயிர் பாதிப்பு  ஏற்படலாம். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளோம்.  ராமகிருஷ்ணனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரும் தீவிர  சிகிச்சை பெற்று வருகின்றனர் என டாக்டர்கள் கூறினர். கோவிந்தம்மாளை மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரை செய்துள்ளனர். ராமகிருஷ்ணன் கூறுகையில், நேற்று மாலை வயலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தேன். திடீரென வெடிசத்தம்  கேட்டது.  அதில் எனக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு எனக்கு மயக்கம்  ஏற்பட்டது என்றார்.  கடந்த 3  மாதத்துக்கு மானாம்பதி பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். பலர்  காயமடைந்தனர். வெடிக்காத அதிபயங்கர ராக்கெட் லாஞ்சரை, வெடிகுண்டு  நிபுணர்கள் செயல் இழக்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன ரகம் தெரியவில்லை
எஸ்பி கண்ணன் கூறுகையில், அனுமந்தபுரம் துப்பாக்கி பயிற்சி மையத்தில் வெடிக்காத பொருட்களை பைக்கில் ராமகிருஷ்ணன் எடுத்து சென்றார். அவர், சிமென்ட் சாலையில் சென்றபோது, அந்த பொருள் விழுந்தவுடன் வெடித்துள்ளது என தெரியவந்துள்ளது. அது, எந்த ரக வெடிப்பொருள் என தெரியவில்லை. இது சம்பந்தமாக வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்” என்றார்.

அடிக்கடி விபத்து
20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கி பயிற்சி மையத்தில் இருந்து ராக்ெகட் லான்சர்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திலும், வீடுகளிலும் விழுந்து எரிவது வழக்கம். இதுபோல் விவசாய நிலத்தில் விழுந்ததில் மாடு மேய்த்து கொண்டிருந்த 2 பேர் காயமடைந்தனர். ஒருமுறை அங்கன்வாடி மையத்தில் விழுந்தது. அப்போது அங்கு குழந்தைகள் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. அஞ்சூர் பகுதியில் தொகுப்பு வீட்டில் விழுந்து கட்டிடம் சேதமானது. கடந்த 5 மாதத்துக்கு முன் வெடிக்கப்படாத ஏராளமான ராக்கெட் லாஞ்சர்களை ேபாலீசார் கண்டெடுத்தனர். இரவு நேரங்களில் பயிற்சியின்போது அதிக சத்தம் கேட்பதால் பயத்தில் வசித்து வருகிறோம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

குவியல் குவியலாக வெடிபொருட்கள்
இந்த சம்பவத்தில் காயமடைந்த ராமகிருஷ்ணன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, செங்கல்பட்டு மருதம் வெடி பொருள் ஆய்வுக்குழு அதிகாரி ஜெயராமன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ராமகிருஷ்ணன் வீட்டை நேற்றிரவு சோதனையிட்டனர்.  அங்கு  வெடித்தும் வெடிக்காமலும் உள்ள பல மர்ம வெடி பொருட்கள் குவியல் குவியலாக சிக்கின. இரவில் போலீசார் ெதாடர்ந்து நடத்தினர். கடந்த 4 மாதம் முன்பு நடந்த வெடி விபத்தில் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்