கனமழையால் சாய்ந்து ஒரு வாரமாகியும் அகற்றப்படாத மின்கம்பம்
12/11/2019 12:16:28 AM
உத்திரமேரூர், டிச. 11: கனமழையால் சாய்ந்து ஒரு வாரமாகியும் அகற்றப்படாத மின்கம்பத்தால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். உத்திரமேரூர் அருகே காக்கநல்லூர் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். உத்திரமேரூரில் இருந்து காக்கநல்லூர் கிராமத்துக்கு சுமார் 4 கிமீ தூரம் கொண்ட தார்ச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையோரம் ஆங்காங்கே கம்பம் அமைத்து, தெரு விளக்குகள் உள்ளன.இச்சாலை வழியாக பஸ் சேவை இல்லை. இதனால், கிராம மக்கள் இந்த சாலை வழியாக கிராமத்துக்கு நடந்து செல்கின்றனர். மேலும், இந்த சாலையை விவசாயிகள், தங்கள் விவசாய நிலத்திற்கு செல்லவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையில் இந்த சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த ஒரு மின்கம்பம், அங்குள்ள கால்வாயின் குறுக்கே விழுந்தது. அந்த கம்பத்தில் இருந்த வயர்கள், துண்டாகி ஆங்காங்கே தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இதையொட்டி, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சாலையே இருளில் மூழ்கியுள்ளது.
மேற்கண்ட மின்கம்பம் விழுந்த இடத்தில் மழைநீர் கால்வாய் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளதால், மின்கசிவு ஏற்பட்டால் பெறும் மின் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலை முழுவதும் இருளில் மூழ்கி உள்ளதால் கிராம மக்கள் சாலையை அச்சத்துடனே நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கம்பம் விழுந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருவாரமாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், சம்மந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இந்த சாலையோரத்தில் கால்வாயின் குறுக்கே விழுந்துள்ள கம்பத்தை அகற்றி, புதிய கம்பம் அமைக்க வேண்டும். சாலை முழுவதும் உள்ள மின் விளக்குகளை சரி செய்துதர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
திருப்போரூர் நூலகம் எதிரே தேங்கி நிற்கும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்
திருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை
பெண்கள் பயணிக்க கூடுதல் பெட்டி அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை மனு
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
தேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!