தியாகதுருகத்தில் 2 அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை
12/11/2019 12:04:21 AM
கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் உள்ள 2 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.13 லட்சம் மதிப்பிலும், அதே பகுதியில் உள்ள பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப்பள்ளியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.8.50 லட்சம் என மொத்தம் ரூ.21.50 லட்சம் மதிப்பிலான நிதி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது. இரண்டு பள்ளியிலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் அய்யப்பா, ஷியாம்சுந்தர், வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தியாகதுருகம் நகர பொறுப்பாளர் நம்பி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பிரபு எம்எல்ஏ கலந்துகொண்டு இரண்டு பள்ளியில் புதிய கட்டிட கட்ட பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நாகம்மாள், உதவி பொறியாளர் கோமதி, பணி மேற்பார்வையாளர் பச்சமுத்து, பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் செந்தில்குமார், கொளஞ்சியப்பன், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய அண்ணா தொழிற் சங்க செயலாளர் ரமேஷ், நகர அவைத்தலைவர் அய்யம்பெருமாள், நகர பொருளாளர் பாண்டு, நகர இளைஞரணி செயலாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணை தலைவர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
மழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு
விசா முடிந்ததால் வெளிநாட்டை சேர்ந்தவர் கைது
சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் தவிப்பு நெல் மின் உலர்த்தி அமைக்கவும் கோரிக்கை
விழுப்புரம் அருகே பரபரப்பு விஷம் குடித்த பெண் சாவு கள்ளக்காதலன் கவலைக்கிடம் போலீசார் தீவிர விசாரணை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்