குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து விழுப்புரத்தில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
12/11/2019 12:04:15 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து சட்ட நகலை எரிக்க முயன்ற, சோஷியல் டெமாக்டரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இந்திய நாட்டில் முஸ்லிம்களையும், தமிழர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.,) கட்சி சார்பில், சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே, மாவட்ட பொதுசெயலாளர் முகமது ரஃபி தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர். தலைவர் சாதிக்பாஷா, பொருளாளர் சான்பாஷா, துணை தலைவர் சாதிக், செயலாளர் சையது ஹசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதையடுத்து, சட்ட நகலை எரிக்க முயன்ற நிர்வாகிகளை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து 52 பேரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
மழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு
விசா முடிந்ததால் வெளிநாட்டை சேர்ந்தவர் கைது
சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் தவிப்பு நெல் மின் உலர்த்தி அமைக்கவும் கோரிக்கை
விழுப்புரம் அருகே பரபரப்பு விஷம் குடித்த பெண் சாவு கள்ளக்காதலன் கவலைக்கிடம் போலீசார் தீவிர விசாரணை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்