விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
12/11/2019 12:04:06 AM
சிதம்பரம்: விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக சிதம்பரம் சுற்று வட்டார இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கில் விலை போகும் நிலங்களை குறைந்த அளவில் பணம் ஒதுக்கீடு செய்து கையகப்படுத்தியதை கண்டித்தும், நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். துரைராஜன், பாலசுப்பிரமணியன், வீரமணி, காந்தி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் மாமல்லன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கடவாச்சேரி, சாலியன்தோப்பு, பிள்ளைமுத்தாபிள்ளைசாவடி, உசுப்பூர், வல்லம்படுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது நிலத்திற்கான இழப்பீடு குறைவாக வழங்கியதைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் கற்பனைசெல்வம், செந்தில்குமார், பொன்னம்பலம், மூர்த்தி, முனுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.ஏற்கனவே நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளின் காலதாமதத்தால் விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
மழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு
விசா முடிந்ததால் வெளிநாட்டை சேர்ந்தவர் கைது
சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் தவிப்பு நெல் மின் உலர்த்தி அமைக்கவும் கோரிக்கை
விழுப்புரம் அருகே பரபரப்பு விஷம் குடித்த பெண் சாவு கள்ளக்காதலன் கவலைக்கிடம் போலீசார் தீவிர விசாரணை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்