தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தல் பாலியல் குற்ற அறிக்கைகளை மருத்துவர்கள் எளிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும்
12/10/2019 7:28:42 AM
திருவாரூர்: பாலியல் குற்றங்கள் தொடர்பான அறிக்கைகளை மருத்துவர்கள் எளிய முறையில் சமர்பிக்க வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற மருத்தவ அலுவலகர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி பேசினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைபாதுகாக்கும் (திருத்தப்பட்டது) சட்டம் 2019 தொடர்பான சட்ட மருத்துவம் குறித்த மருத்தவ அலுவலகர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கலைமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு டிஆர்ஓ பொன்னம்மாள், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பக்கிரிசாமி, தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.கலைமதி தெரிவித் ததாவது, பாலியல் குற்றங் களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (திருத் தப் பட்டது) சட்டம் 2019ன் படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் உளவியல் சார்ந்த பரிசோதனைகள் மேற் கொள்ளப்படும் போது சட்டம் சார்ந்த நடை முறைகள் மற்றும் குழந்தைகளின் உளவியல் சார்ந்த பிரச்னைகளை கையாள வேண்டியுள்ளதால் மருத்துவ அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் இப்பயிற்சி வகுப்பானது நடத்தப்படுகிறது. பாலியல் குற்றங்கள் தொடர்பான அறிக்கைகளை மருத்துவர்கள் சமர்ப்பிக்கும் போது எளிய முறையில் புரிந்து கொள்ளும் வண்ணம் அறிக்கைகளை வழங்க வேண்டும்.
மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்களா என்பதனை அவர்களின் நடவடிக்கை கொண்டு அறிந்துகொண்டு அதனையும் அறிக்கையாக தர வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி கலை மதி தெரிவித்தார்.
இப்பயிற்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு, பெங்களுர் வைதேகி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த தடயவியல் மருத்துவம், நச்சுயியல் தலைமைப் பேராசிரியர் டாக்டர் ஜெகதீஷ் நாராயண ரெட்டி, சென்னை துளிர் அமைப்பினைச் சார்ந்த வித்யா ரெட்டி மற்றும் நான்சி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
ஐஎஸ்ஐ முத்திரையின்றி வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை
கலெக்டர் எச்சரிக்கை அழுகிய நெற்கதிர்களை கையில் ஏந்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
லாரி மோதி ஆழித்தேர் கூண்டு சேதம்
திருவாரூரில் பரபரப்பு மழையால் பாதித்த பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் சாலை மறியல்
105 பெண்கள் உள்பட 400 பேர் கைது குடவாசலில் பள்ளி இடிந்தது எதிரொலி பள்ளி கட்டிட உறுதித்தன்மை, முன்னேற்பாடு பணிகள்
கலெக்டர் நேரில் ஆய்வு திருவாரூரிலிருந்து கன்னியாகுமரிக்கு 1,200 மெ.டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!