கண்ணை கட்டும் விலையால் பொதுமக்கள் அவதி திருச்சியில் வெங்காய கடை, மண்டிகளில் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை
12/10/2019 5:55:01 AM
திருச்சி, டிச.10: திருச்சியில் வெங்காயகடை, மண்டிகளில் குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி போலீசார் சோதனை நடத்தி வெங்காயத்தை பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். நாடு முழுவதும் வெங்காயம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லமுடியாக வேதனையில் தவித்து வருகின்றனர். இதையடுத்து வெங்காயத்தை பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருட்கள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை டிஜிபி பிரதீப் வி.பிலிப் எச்சரித்துள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ளார்களா என சோதனை செய்யவும் உத்தரவிட்டார்.
அதன்படி எஸ்பி ஸ்டாலின் அறிவுரையின்படி டிஎஸ்பி பாரதிதாசன் மேற்பார்வையில் குடிமை பொருட்கள் வழங்கல் குற்றபுலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர் சேரன் நேற்று திருச்சி காந்திமார்க்கெட் வெங்காய மண்டி மற்றும் பால்பண்ணையில் உள்ள வெங்காய மண்டியில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் காந்திமார்க்கெட் மற்றும் பால்பண்ணை வெங்காய மண்டியில் உள்ள 46 கடைகளில் சோதனை நடத்தினார். இந்த சோதனையில் வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்காமல், வியாபாரத்திற்கு வரும் வெங்காயங்களை உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திய இன்ஸ்பெக்டர் சேரன், வெங்காயத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்றால் அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகள்
கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு
வீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது
தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
பொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்
வீட்டுச்சுவர் இடிந்து முதியவர் காயம்
10,008 வடைமாலை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்