சோழவந்தான் ஏடிஎம்.மில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த டிரைவர்
12/10/2019 2:24:06 AM
சோழவந்தான், டிச.10: சோழவந்தான் ஏடிஎம்.மில் கீழே கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபரின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர். சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் மணி என்ற அய்யர் மணி(39). டிரைவர். இவர் நேற்று காலை சோழவந்தான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம்.மில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏடிஎம் மிஷின் அருகே கீழே பணக்கட்டு கிடந்தது. எடுத்து பார்த்த போது 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் ஒன்பதும், 500 ரூபாய் தாள்கள் முப்பத்தி நான்கும் என 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. இதை உடனடியாக சோழவந்தான் காவல் நிலையத்தில் அய்யர்மணி ஒப்படைத்தார். இது குறித்து வங்கி மேலாளர் நல்லதம்பியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், இந்த பணத்தை அம்மன் சன்னதியில் மொபைல் கடை வைத்துள்ள கணேஷ் பாண்டி என்பவர் தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணேஷ் பாண்டியிடம் பணத்தை ஒப்படைத்தனர். கீழே கிடந்த பணத்தை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த அய்யர்மணியின் நேர்மையை, போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
மேலும் செய்திகள்
வில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா
செக்கானூரணி வரும் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அனுமன் ஜெயந்தி விழா
3 கொள்ளையர் கைது
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் வைத்து போராட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்