வன்முறைக்கு எதிராக பெண்கள் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
12/10/2019 2:23:52 AM
மதுரை, டிச.10: மதுரை மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு (ஏஐடியூசி) சார்பில் பேச்சியம்மன் படித்துறையில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ெபண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தனிச்சட்டம் இயற்றி, நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றம் மூலம் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு (ஏஐடியூசி) சார்பில் பேச்சியம்மன் படித்துறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் காமேஸ்வரி, ஆரோக்கியமேரி கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்.
மேலும் செய்திகள்
வில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா
செக்கானூரணி வரும் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அனுமன் ஜெயந்தி விழா
3 கொள்ளையர் கைது
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் வைத்து போராட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்