கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கேங்மேன் தேர்வில் 200 பேர் பங்கேற்பு
12/10/2019 2:23:31 AM
மதுரை, டிச.10: மதுரையில் நடந்துவரும் மின்வாரிய கேங்மேன் தேர்வில் தினமும் 200 பேருக்கு தேர்வு நடக்கிறது. மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான தேர்வு திருப்பாலை துணை மின் நிலைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வாரிய பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்படும் இத்தேர்வில் பங்கேற்க 1767 பேர் விண்ணப்பித்திருந்தனர். அனைவருக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்த இயலாது என்பதால், தினமும் 200 பேர் வரைவழைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. நான்கு கட்டமாக நடத்தப்பட்டு வரும் இத்தேர்வில், நேற்று 200 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா மேற்பார்வையில், ஒரு செயற்பொறியாளர் தலைமையில் 10 உதவி செயற்பொறியாளர்கள், 10 உதவி மின் பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் தேர்வை நடத்தினர். உதவி செயற்பொறியாளரும் மக்கள் தொடர்பு அதிகாரியுமான உமா கூறுகையில், ``வரும் 13ம் தேதி மாலை 6 மணி வரை தேர்வு நடக்கிறது. அதன்பின்னர்தான் தேர்வில் பங்கேற்றவர்கள், வராதவர்கள், தேர்வு பெற்றவர்கள் விபரம் தெரியவரும். தேர்வு நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவக்குழுவினர் உள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
வில்லாபுரத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா
செக்கானூரணி வரும் ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அனுமன் ஜெயந்தி விழா
3 கொள்ளையர் கைது
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் வைத்து போராட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்