ஆரணி பனையூர் ஊராட்சிக்கு ெசல்லும் சாலையில் சாய்ந்து ஆபத்தான மின்கம்பங்களால் பொதுமக்கள் அச்சம்
12/10/2019 12:44:50 AM
ஆரணி, டிச.9: ஆரணி அடுத்த பனையூர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி அடுத்த பனையூர் ஊராட்சிக்குட்பட்ட பனையூர், வடக்கமேடு, ஓகையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என இந்த சாலை வழியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். மேலும் ஆரணி, செய்யார் உள்ளிட்ட நகரங்களுக்கு பனையூர் கூட்ரோட்டிற்கு வந்து தான் செல்ல வேண்டும். அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த சாலையின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், மின்கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனை சீரமைக்க சாய்ந்துள்ள மின்கம்பங்களில் ஏறினால் ஆபத்து ஏற்படும் என்பதால் மின்வாரிய ஊழியர்கள் இதனை சரிசெய்யாமல் உள்ளனர்.
இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊராட்சி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே பேராபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை வட்டார மருத்துவ அலுவலர் அட்வைஸ்
தேர்தல் கட்டுப்பாட்டால் குறைதீர்வு கூட்டம் ரத்து வீட்டுமனையை மீட்டுத்தரக்கோரி குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆர்டிஓ தலைமையில் நடந்தது
இளம்பெண் தற்கொலை
திருவண்ணாமலையில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு
ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை சுகாதார இணை இயக்குனர் ஆய்வு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்