குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்ட மானியம் பயனாளிகள் தேர்வு செய்ய சிறப்பு முகாம்
12/9/2019 8:58:42 AM
சிவகங்கை, டிச.9: அனைவருக்கும் வீடு திட்டத்தில் நகராட்சி பகுதிகளில் பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகள் தாங்களாகவே வீடுகட்டிக் கொள்ள மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொந்த இடத்தில் ஓடு, குடிசை வீடுகளில் வசித்து வருபவர்களின் வீடுகளை புதிய கான்கிரீட் வீடுகளாக கட்டுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தின் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் மானியமாக ரூ.2.10 லட்சம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நான்கு தவணைகளாக நேரடியாக செலுத்தப்படும். பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா வைத்திருந்து அதாவது நகராட்சி பகுதிகளில் சொந்த இடம் வைத்திருந்து, வீடு கட்டாதவர்கள் மற்றும் பட்டா வைத்திருந்து தங்களது சொந்த இடங்களில் தகர வீடு, குடிசை வீடு கட்டி வசித்து வருபவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. டிச.12ல் சிவகங்கை, டிச.13ல் காரைக்குடி, டிச.14ல் தேவகோட்டை ஆகிய இடங்களில் முகாம் நடக்க உள்ளது. கூடுதல் விபரம் அறிய 97891 59329 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குடும்பநலம் தொடர்பான கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
காரைக்குடியில் புதிய தார்ச்சாலைகள் மழைக்கு சேதம் பணிகள் தரமில்லை என குற்றச்சாட்டு
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் தலைமையாசிரியர் சங்கம் வலியுறுத்தல்
குறைந்த மின்அழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுது சிப்காட் மக்கள் புலம்பல்
தொடர் மழையால் அழுகிய பயிர்கள் கண்ணீர் வடிக்கும் கடலை விவசாயிகள் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
வயல்களில் தண்ணீரை வெளியேற்ற கோரி ஊரணங்குடி மக்கள் மறியல்
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!