உள்ளாட்சி தேர்தல் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
12/9/2019 8:57:27 AM
திருமங்கலம், டிச.9: ஊரக உள்ளாட்சிகளில் இன்று துவங்கும் வேட்பு மனு தாக்கல் குறித்து திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று முதல் வேட்புமனுதாக்கல் துவங்குகிறது. சிற்றூராட்சி எனப்படும் கிராம பஞ்சாயத்துகளில் வார்டு உறுப்பினர்களுக்கான மனுதாக்கல் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், சிற்றுராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் மனுதாக்கல் செய்யவேண்டும்.
இன்று துவங்கி வரும் 13ம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 வரையில் மனுதாக்கல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கான சிறப்பு தேர்தல் பயிற்சி வகுப்பு திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஆர்டிஓ முருகேசன், பிடிஓக்கள் உதயகுமார், சங்கர்கைலாசம் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் நடத்தைகள் குறித்து பேசினர். இந்த கூட்டத்தில் திருமங்கலத்திலுள்ள 38 ஊராட்சி செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற சிறுவன் கைது
பாலமேட்டில் இன்ஸ்பெக்டர் வாகனம் கண்ணாடி உடைப்பு
வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு தூய்மை பணிக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.500 ஒதுக்கீடு
செல்லம்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
மதுரை மாவட்டத்தில் மல்லிகை ஏற்றுமதி மையம் 2 இடங்களில் அமையவுள்ளது மாணிக்கம் தாகூர் எம்பி தகவல்
திருமங்கலம் ஜிஹெச்சில் கொரோனா தடுப்பூசி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்