ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரில் மஞ்சள் ஓடை குளம் உடையும் அபாயம்
12/9/2019 8:24:09 AM
கடையம், டிச. 9: ஆழ்வார்குறிச்சி அருகே மஞ்சள் ஓடை குளத்து கரையில் ஏற்பட்ட பள்ளத்தால் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் குளம் உடையும் அபாய நிலையில் உள்ளது.ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள சிவசைலம் கிராமம் கருத்தப்பிள்ளையூரில் மஞ்சள் ஓடை குளம் உள்ளது. இந்த குளத்திற்கு கடனா நதி அணை அரசபத்து கால் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த குளத்தை நம்பி சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளம் நிரம்பியவுடன் மறுகால் விழுந்து கடனா நதி ஆற்றில் சென்று கலக்கிறது.இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை பெய்த உடன் குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு விவசாயிகள் பிசான பருவ சாகுபடிக்கு நெல் நாற்று நட்டனர். இந்த குளத்தின் மறுகால் அருகில் குளத்து கரையின் அடியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி கடனா ஆற்றில் கலந்து வருகிறது. நாற்று நட்டு ஒரு மாதம் ஆகிறது. இன்னும் பயிர் அறுவடை வரை தண்ணீர் தேவைபடுகிறது. இதே நிலமை நீடித்தால் குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேறி பயிர்கள் தண்ணீரின்றி வறண்டு விடும் அபாய நிலை உருவாகியுள்ளது. இந்த உடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக குளத்தின் அடிப்பகுதியில் அரிப்பை ஏற்படுத்தி ஓட்டையை அதிகரித்து வருகிறது. இதனால் குளம் எந்த நேரமும் உடையும் அபாயத்தில் உள்ளது. குளம் உடைந்தால் 100 ஏக்கர் அளவில் பயிர் செய்யபட்ட நெல் பயிர்கள் மூழ்கி விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.
இந்த குளத்தில் நீர் வள நில வள திட்டத்தின் கீழ் 2017-18ம் ஆண்டு மராமத்து பணிகள் நடைபெற்றன. அப்போது மறுகால் ஓடையில் பணிகள் முறையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை நிருபிக்கும் வகையில் தற்போது மறுகால் சிமென்ட் கரையில் நீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.தென்காசி மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குளத்து கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைத்து, மறுகால் கரையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பாளை சாந்திநகர் குழந்தை இயேசு ஆலய புனிதர்கள் கெபி அர்ச்சிப்பு விழாவில் சிறுவர்களுக்கு உறுதிப்பூசுதல்
நெல்லை மாவட்ட ஹாக்கி வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் வழங்கினார்
மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
தேர்தல் பிரசாரத்தில் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி கலை சங்க கூட்டமைப்பு கோரிக்கை
தேர்தல் அறிவிப்பு எதிரொலி தலைவர்கள் சிலைகளுக்கு ‘சீல்’
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 6 பேர் கைது
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்