விவசாயிகள் வலியுறுத்தல் முத்துப்பேட்டை தர்கா நிர்வாகம் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு
12/9/2019 8:22:46 AM
முத்துப்பேட்டை, டிச.9: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவின் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா உலகப் புகழ்பெற்ற ஒரு புண்ணியத்தலம். இங்கு நடைபெறும் வருடாந்திர பெரிய கந்தூரி விழா 14 நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புனிதக் கொடி ஊர்வலத்துடன் 27.12.2019 அன்று கந்தூரி விழா துவங்க உள்ளது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவின் முக்கிய நாளான சந்தன கூடு வைபவத்தை முன்னிட்டு அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தாண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்ற தேதியை அரசுக்கு முன்கூட்டியே அறிவித்த நிலையிலும், தற்போது உள்ளாட்சி தேர்தல் கந்தூரி விழாவின் கொடியேற்ற நாளில் (27ம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.எனவே வேறு வழியின்றி தேர்தல் புறக்கணிப்பை அன்றைய தினம் செய்ய உள்ளோம். 27ம் தேதி தேர்தல் தேதியை மாற்றி அறிவித்தாலன்றி, எங்களது முடிவில் மாற்றம் செய்ய மாட்டோம் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்
திருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு
மன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது
கட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா
நீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்
நாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!