புதுவையில் சுகாதாரம் சிறந்த முறையில் உள்ளது
12/9/2019 12:06:42 AM
புதுச்சேரி, டிச. 9: இந்திய வாதவியல் சங்கத்தின் 35வது ஆண்டு மாநாடு புதுச்சேரி ஜிப்மரில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, துபாய், இலங்கை, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 1200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50க்கும் மேற்பட்ட வாதநோய் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது: ஜிப்மர் மருத்துவமனை நாட்டில் உள்ள முக்கிய மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் மூன்றாவதாக உள்ளது. இந்திய வாதவியல் சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஜிப்மர் மாணவர்தான். நாட்டில் மருத்துவ ஆராய்ச்சி மிக முக்கியம். இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அதில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளூரிலேயே பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு நாம் என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மருத்துவ நிதியுதவியை குறைந்த அளவே ஒதுக்கி வருகிறது.
கிராமப்புற மக்கள் சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்டவை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அதுபோல் நகர்ப்புற மக்கள் பணக்கார வாழ்க்கையில் துரித உணவுகளை சாப்பிட்டு நிறைய நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். புதுச்சேரியில் சுகாதாரம் சிறந்த முறையில் உள்ளது. குறிப்பாக வெளிநோயாளிகள் பிரிவில் நாட்டிலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்காக விருது பெற்றுள்ளோம். இருதய சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை ஜிப்மர் இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் ஜிப்மர் ஏழைகளின் சொர்க்கமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் சுவாடு, டெல்லி பிரெஞ்சு தூதரகத்தின் சிஎன்ஆர்எஸ் அலுவலக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் காவேரி, ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால், இந்திய வாதவியல் சங்க தலைவர் டெபாஷிஸ் டாண்டா, மாநாடு ஒருங்கிணைப்பு தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பு செயலாளர் ெநகி நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
பிரதமர் வந்து சென்றவுடன் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது கவர்னர் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம்
புதுச்சேரியை சிறந்த மாநிலமாக்குவோம்: மோடி பேச்சு
ஆட்சியை கவிழ்க்க துணை போனவர்கள் இனி அரசியலில் தலையெடுக்கக் கூடாது திருமாவளவன் எம்பி ஆவேசம்
பாஜகவுடன் கூட்டணி சேரும் என்ஆர் காங்., அதிமுக சாம்பலாகி விடும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாபம்
குழந்தைகளுக்கு புரதச்சத்து தேவை உணர்ந்து புதுச்சேரி அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை வழங்கப்படும் கவர்னர் தமிழிசை அதிரடி
பிரதமர் பாதுகாப்புக்காக துணை ராணுவம் புதுவை வருகை
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!