கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் எனது பெயரை தவறாக பயன்படுத்தி மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்
12/7/2019 6:33:28 AM
சென்னை, டிச.7: கபாலீஸ்வரர் கோயிலுக்கு எனது பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்ட நபர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கோயில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அது ெவறும் புரளியென தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் கடிதத்தில் இருந்த முகவரியை வைத்து சைதாப்பேட்டையை சேர்ந்த முஹம்மது ஹனீப் பாகவி என்பவரது வீட்டுக்கு சென்று, அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மிரட்டல் கடிதத்திற்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு வேண்டாதவர்கள் யாரோ என் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர் என்று கூறி அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார்.
இருந்தாலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கூறப்படும் முஹம்மது ஹனீப் பாகவி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடிதத்தில் உள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து இல்லை. யாரோ திட்டமிட்டு எனது பெயரை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
எஸ்ஆர்எம் கல்லூரி விடுதி அறையில் மருத்துவ மாணவி தற்கொலை
வேலைக்கு அழைப்பது போல் நடித்து 11 பேரின் செல்போன் அபேஸ்: 3 பேர் கைது
மடிப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டில் ரூ.1.3 லட்சம் பறிமுதல்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கண்காணிக்க 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம்: ஒரு மேஜையில் 3 பேருக்கு மட்டுமே அனுமதி
பொங்கலை முன்னிட்டு சென்னையில் கனரக, சரக்கு வாகனங்கள் நுழைய தடை: போக்குவரத்து போலீசார் உத்தரவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்