நகராட்சி அதிகாரியை தாக்கி துணிகர கொலை மிரட்டல்
12/5/2019 5:44:04 AM
புதுச்சேரி, டிச. 5: முத்தியால்பேட்டையில் மாடு பிடிக்க சென்ற நகராட்சி அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உரிமையாளர் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுவை, முத்தியால்பேட்டை, பாரதிதாசன் வீதியில் வசிப்பவர் சுப்பிரமணி (39). புதுச்சேரி நகராட்சியில் துப்புரவு பணி கண்காணிப்பாளராக பணியாற்றும் இவர் நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை குறிஞ்சி வீதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை ஊழியர்கள் உதவியுடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மாடுகளின் உரிமையாளர்களான பழனி, மணி இருவரும் சுப்பிரமணியை அசிங்கமாக திட்டியதோடு, அவரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததோடு கையால் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் பழனி, மணி 2 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த முத்தியால்பேட்டை எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார், தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பிரதமர் வந்து சென்றவுடன் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது கவர்னர் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம்
புதுச்சேரியை சிறந்த மாநிலமாக்குவோம்: மோடி பேச்சு
ஆட்சியை கவிழ்க்க துணை போனவர்கள் இனி அரசியலில் தலையெடுக்கக் கூடாது திருமாவளவன் எம்பி ஆவேசம்
பாஜகவுடன் கூட்டணி சேரும் என்ஆர் காங்., அதிமுக சாம்பலாகி விடும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாபம்
குழந்தைகளுக்கு புரதச்சத்து தேவை உணர்ந்து புதுச்சேரி அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை வழங்கப்படும் கவர்னர் தமிழிசை அதிரடி
பிரதமர் பாதுகாப்புக்காக துணை ராணுவம் புதுவை வருகை
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!