மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
12/5/2019 5:17:13 AM
ஈரோடு, டிச. 5: ஈரோடு ரயில்வே காலனியை சேர்ந்தவர் பத்மா (47). இவர் ஈரோடு ரயில்வே பார்சல் சர்வீசில் ஜூனியர் கிளர்க்காக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் முனியசாமி என்பர் கடந்த 2012ம் ஆண்டு இறந்து விட்டார். இந்த நிலையில் சரவணன் (46) என்ற கூலி தொழிலாளியை இரண்டாவதாக கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சரவணனுக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தநோய் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி பத்மா உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வருவதாக சரவணனிடம் கூறி சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் சரவணன் மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பத்மா உடனடியாக சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சரவணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு இன்று 218 பள்ளிகள் திறப்பு
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த கோரிக்கை
தோடர் பழங்குடியினரின் வளர்ப்பு எருமைகளுக்கான ‘உப்பட்டும்’ பாரம்பரிய விழா
மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்
4 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஊட்டியில் காலநிலை மாற்றம் பகலில் நிலவும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!