சவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை
12/5/2019 5:14:25 AM
கோவை, டிச. 5: சவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம் ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘சவுத் இந்தியா பின்வெஸ்ட பிரைவேட் லிமிடெட்’ என்னும் நிதி நிறுவனம் (எஸ்.ஐ.எப்.) மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு அன்னூர், திருப்பூர், வடவள்ளி, ஊட்டி, கூடலூர், குன்னூர், பெருந்துறை, மேட்டூர், நாமக்கல், பாலக்கோடு, அரூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. திருக்கோவிலூர், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மிக விரைவில் கிளைகள் திறக்கப்பட உள்ளன. இந்நிறுவனம், தற்போது ரூ.100 கோடி வர்த்தக இலக்கை எட்டியுள்ளது. இதற்கான விழா கோவையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்நிறுவன தலைவர்-நிர்வாக இயக்குனர் நடராஜன், நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். இது பற்றி இந்நிறுவன தலைவர்-நிர்வாக இயக்குனர் நடராஜன் கூறியதாவது:எஸ்.ஐ.எப் நிறுவனமானது தனது மிகச்சிறந்த மேலாண்மை மற்றும் இயக்க கோட்பாடுகளின் தொகுப்பை கொண்ட ஒரு தனித்துவம் படைத்த நிறுவனமாக விளங்குகிறது. எஸ்.ஐ.எப் பணியாளர்களின் நலன், வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் தொழில் சார்ந்தவர்களின் கூட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழில்துறையின் சிறந்த உற்பத்தி திறனுடன் விளங்குகிறது. உயர்நிலை வாடிக்கையாளரின் மதிப்பு மற்றும் உயர் தரமான போர்ட்போலியோ ஆகியவற்றுடன் இந்நிறுவனம் மிகச்சிறந்ததாக செயல்பட்டு வருகிறது. இலக்கை எட்ட உதவிய வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இவ்வாறு நடராஜன் கூறினார்.
மேலும் செய்திகள்
தி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு
போலி பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல்
சிறுமுகை விருட்ச பீடத்தில் இன்று கும்பாபிஷேக விழா
கோவையில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
கோவையில் தே.மு.தி.க. சார்பில் இன்று பொங்கல் விழா பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்
மலைவாழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்