SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தல் அறிவித்தும் வேகம் காட்டாத சுயேட்சைகள் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களை பாதுகாக்க வேண்டும்

12/5/2019 5:10:53 AM

புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.இதுகுறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இத்தருணத்தில் மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க வயலில் தேங்கிய நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும். அதிக நாட்கள் வயலில் நீர் தேங்கியிருப்பின் தழை மற்றும் ஜிங்க் சத்துக்குறைபாடு ஏற்பட்டு இளம்பயிர்கள் இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாற வாய்ப்புண்டு. இதை போக்க, நீரை வடித்தவுடன் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி தெளித்திட வேண்டும். தண்டு உருவாகும்போதும் பூக்கும் பருவத்திலும் நீர் தேங்கி பயிர் பாதிக்கப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை 10 லிட்டர் நீரில், தெளிப்பிற்கு முந்தைய நாள் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டர் நீரில் கலந்து மாலைவேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி தெளித்திட வேண்டும்.நீர் தேங்குவதால் பயிர் வளர்ச்சி குன்றிக் காணப்பட்டால் நீரை வடித்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து அதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும். நெற்பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கியிருப்பின் குருத்து ஈ, இலைச்சுருட்டு புழு, பச்சைத் தத்துப்பூச்சி போன்ற பூச்சிகளாலும் குலைநோய், இலையுறை கருகல் நோய் போன்ற நோய்களாலும் தாக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைக் கண்டறிந்து தக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வயலில் தேங்கிய நீரால் இளம்பயிர்களில் அழுகல் எற்பட்டிருப்பின் இருப்பிலுள்ள நாற்றுகளை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக நாற்றுகள் கொண்ட குத்துகளிலுள்ள நடவுப் பயிரை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட வேண்டும். இவை தவிர, இயற்கை இடர்பாடுகளால் உண்டாகும் பயிர் சேதத்தினை ஈடு செய்திட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிரை காப்பீடு செய்திடலாம். பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 15 வரை காலஅளவு உள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உடனடியாக காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயனடையலாம். மேலும் இது குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள அருகில் உள்ள வட்டார வேளாண் மையங்களை விவசாயிகள் அணுகி பயன்பெறலாம். இவ்வவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • la-palma-29

  ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

 • bulgaria-24

  பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

 • murasoli-23

  ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

 • selem-gas-23

  சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

 • andhra-flood-22

  ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்