பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
12/5/2019 1:09:39 AM
தண்டையார்பேட்டை: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில், மத்திய, மாநில அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை நடந்தது. தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் சுதா, முன்னாள் எம்எல்ஏ யசோதா முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ‘‘இந்தியா முழுவதும் பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்து மூடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
இதை தடுத்து நிறுத்த முடியாத மத்திய, மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என கோஷம் எழுப்பினர். இதில், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி பேசியதாவது: இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க காவல்துறை, சட்டத்துறை மற்றும் மத்தியில் ஆளும் அரசு, தமிழகத்தை ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
வாகன விபத்தில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிவாரண நிதி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்
மாவட்டம், மண்டலம் வாரியாக சென்னையில் மது விற்பனையை கண்காணிக்க பறக்கும் படை: தேர்தல் அதிகாரி பிரகாஷ் தகவல்
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ. 4.18 லட்சம் பறிமுதல்
சுமை தூக்குவதில் தகராறு தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை: சக தொழிலாளி வெறிச்செயல்; சென்ட்ரலில் பயங்கரம்
திருவொற்றியூரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்
மினி லோடு வேனில் கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி உட்பட 4 பேர் கைது
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்