வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகைகள்
12/5/2019 1:08:59 AM
கூடுவாஞ்சேரி, டிச.5 : வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில், அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களில் சென்று வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் கூறியும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை 18 கிமீ தூரம் கொண்டது. இதில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், நல்லம்பாக்கம் மற்றும் வெங்கம்பாக்கம் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கூட்ரோடு பகுதிகளில் உள்ள 4 இடங்களில் விபத்து பகுதி என்றும், வளைவு பகுதியில் எந்த ஊர்களுக்கு செல்வது குறித்தும் ராட்சத பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பெயர் பலகைகள் சரியாக பொருத்தாமல் விட்டதால், சில மாதத்திலேயே காற்றடிக்கும்போது அவை உடைந்து, மடிந்து அந்தரத்தில் தொங்குகின்றன.மேலும், பலத்த காற்று வீசும்போது பெயர் பலகைகள் ஆடுகின்றன. அவை எந்த நேரத்தில் விழுமோ என்ற அச்சத்துடன் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் பெரும் விபத்து ஏற்டும் முன், அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
மேலும் செய்திகள்
தாம்பரம் - வாரணவாசி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் பாலாற்று குடிநீர்: கண்டும் காணாமல் உள்ள அதிகாரிகள்
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் அறிவிப்பு
மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்த சாலைகள்: மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
திருப்போரூர் கோயில் குளத்தில் ஆண் சடலம்
27 நட்சத்திர கோயிலில் 108 கோ பூஜை விழா
காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்