சுசீந்திரம் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு
12/5/2019 12:01:03 AM
சுசீந்திரம், டிச.5: சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு 2வது தெருவில் வசித்து வருபவர் மணி(66). இவர் 15 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் வீடு சென்னையில் உள்ளது. அவரை பார்க்க மணி கடந்த மாதம் சென்னை சென்றார்.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் மணியின் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடக்கிறது என கூறியுள்ளார். இதையடுத்து மணி சென்னையில் இருந்து ஊர் திரும்பினார். அவர் வீட்டுக்கு வந்தபோது பீரோவை உடைத்து ரூ.10 ஆயிரம், 3 கிராம் தங்க நகை, ஐம்பொன் மோதிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து மணி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
என்ன வழக்கு என்றே தெரியவில்லை ஓராண்டுக்கு மேலாக ஈரான் சிறையில் தவிக்கும் 9 குமரி மீனவர்கள்
சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு
மார்த்தாண்டம் அருகே கோயிலில் திருடிய 2 பேர் கைது
தெலங்கானா மாநில அதிகாரிகள் குமரி வருகை
குளச்சலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
கயிறு ஆலையில் பயங்கர தீ
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்