மேலூர் நான்குவழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகனங்கள் ஹைவே போலீசார் கவனிப்பார்களா?
12/4/2019 1:26:46 AM
மேலூர், டிச. 4: அதிவேகமாக வாகனங்கள் செல்லும் நான்குவழிச்சாலையில் திடீர் திடீரென குறுக்கிடும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அதை ஹைவேபட்ரல் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரையில் இருந்து திருச்சி சென்னை வரை அதிவேகமாக செல்ல வசதியாக நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எதிர் திசையில் வாகனங்கள் வராது என்பதால் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்துமே 100 கி.மீ. வேகத்திற்கு குறையாமல் செல்கின்றன. சாலை அமைத்த காலத்தில் இதை அறியாமல் ஆங்காங்கே உள்ள கிராம மக்கள் இச்சாலைகளை அசால்டாக கடப்பது என்று இருந்தனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு நூற்றுக்கணக்கில் உயிர்பலிகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்தே தற்போது கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, சாலைகளை அதிக கவனத்துடன் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு பதிலாக, கிராம மக்கள் வளர்க்கும் கால்நடைகள் சாலைகளில் குறுக்கில் எப்போது வேண்டுமானாலும் கடக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குவது அடிக்கடி ஏற்படுகிறது. கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர். இவையே காலை மற்றும் மாலை வேளைகளில் சாலையை கடந்து செல்கின்றன. கோயில் காளைகளும் ரோட்டில் வலம் வருகின்றன. இதனால் இந்த கால்நடைகள் அடிப்பட்டு இறப்பதுடன், மனிதர்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இது அடிக்கடி கருங்காலக்குடியில் நடக்கும் ஒரு சம்பவமாக உள்ளது. இப்பகுதியில் சுற்றி திரியும் மாடுகள் நான்குவழிச்சாலையில் ஹாயாக படுத்து கொண்டு விபத்திற்கு வழி வகுக்கிறது. அதிகமாக கால்நடைகள் சாலையை ஆக்கிரமிக்கும் இடங்களில் ஹைவேபட்ரல் தங்கள் கவனத்தை செலுத்தி அந்த கால்நடைகளின் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும். இதனால் தேவையற்ற விபத்துக்களும் தவிர்க்கப்படும்.
மேலும் செய்திகள்
லாரி டிரைவர் மர்மச்சாவு
மேலூர் அருகே மழையால் பதராக மாறிய நெற்பயிர்
வைகை தண்ணீரை பங்கீடுவதில் பிரச்னை இரண்டு கிராமமக்கள் அடுத்தடுத்து போராட்டம் ஒரு மணிநேரம் சாலைமறியலால் பரபரப்பு திருமங்கலம்/திருப்பரங்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாககுழு கூட்டம்
வைத்தியநாதபுரத்தில் ஓய்வு அரசு அதிகாரி வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை பணம், பொருட்களும் அபேஸ்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!