SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி முகாம்

12/4/2019 1:25:46 AM

மதுரை, டிச. 4: கற்றல் குறைபாடுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மேலப்பொன்னகரம் கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். இந்த முகாமில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். வட்டார வள மையத்திற்கு 2 ஆசிரியர்கள் வீதம் 78 பேர் கலந்து கொண்டனர். சென்னை டிஸ்லெக்சியா அசோசியேஷன் பொறுப்பாளர் மீனா கல்யாண்குமார் பயிற்சி அளித்தார். பயிற்சியில், கற்றலில் குறைபாடுடைய மாணவர்களை கண்டறியும் வழிமுறைகள், குறைபாடுடைய மாணவர்களை வகுப்பறையில் தனிமைப்படுத்தாமல் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து அமரச் செய்தல், இத்தகைய மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பு பயிற்சியின் மூலம் கற்கும் திறனை மேம்படுத்துதல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்