SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

12/3/2019 5:55:49 AM

மதுரை, டிச.3: மதுரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் அலுவலகத்தை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதி விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் காட்டாம்பூர், பிராமணம்பட்டி, வாணியங்காடு, திருக்கோஷ்டியூர், சுன்னாம்பிருப்பு ஆகிய ஐந்து ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் 60 கிராமங்களின் விவசாயிகள் சார்பில் ஏராளமானோர் நேற்று மதுரை வந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை (என்எச்338) திட்ட இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இவர்கள் போராட்டம் நடத்தினர். சாலை பணிக்காக தங்கள் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கான இழப்பீடு தொகையை, சேலம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு வழங்கப்பட்டது போன்று வழங்க வேண்டும். முன்னோர்களது விவசாய நிலங்களை நம்பி விவசாயம் செய்து வரும் தங்களுக்கு, நிலங்களுக்கு உரிய சரியான இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அலுவலகத்தில் மனு வழங்கிவிட்டு, கலைந்து சென்றனர்.

விவசாயிகள் கூறும்போது, ‘‘தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பினோம். எந்தவித பதிலும் இல்லை. ரூ.25 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை வெளிமார்க்கெட்டில் விற்பனையாகும் நிலையில், எங்களது நிலத்திற்கு ரூ.ஆயிரம், ரூ.2ஆயிரம், ரூ.3ஆயிரம் என விலை நிர்ணயம் செய்து, அதுவும் சிலருக்கு மட்டும் பணம் வழங்கியுள்ளனர். குறிவைத்து சிலருக்கு மட்டும் அதிக அளவில் பணம் வழங்கப்பட்டுள்ளது இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளோம். தொடர்ந்து எங்களுக்குரிய சரியான இழப்பீடு வழங்காவிட்டால், எங்கள் நிலத்தை வழங்காமல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaiheavy29

    வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

  • carbomb28

    ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

  • molave28

    வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்