SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூங்காவில் மாணவியிடம் அத்துமீறல் பலாத்கார வீடியோவை தேடும் போலீசார்

12/3/2019 4:05:18 AM


கோவை, டிச.3:  கோவையில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவியின் போட்டோ, வீடியோ பதிவு அடங்கிய செல்போன்களை பறிமுதல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயதான பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் கடந்த 26ம் தேதி இரவு 8 மணிக்கு தனது காதலருடன் பேசி கொண்டிருந்தார். தனது பிறந்த நாளையொட்டிஅவர் காதலனை சந்தித்து பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. ஆட்கள் யாருமில்லாத அந்த நேரத்தில்,  6 வாலிபர்கள் அங்கே வந்தனர். மாணவியின் காதலரை தாக்கினர். இதில் அவர் மயக்கமடைந்தார். இந்நிலையில் மாணவியை மிரட்டி, இருட்டான பகுதிக்கு தூக்கி சென்ற கும்பல் அத்துமீறியது. மணிகண்டன் என்பவர் மாணவியை பலாத்காரம் செய்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். பலாத்கார போட்டோவை மாணவியிடம் காட்டிய கும்பல், எங்கள் மீது ஏதாவது புகார் தந்தால் இதை வாட்ஸ் அப், பேஸ்புக்கில் பரப்பி விடுவோம், நீ எங்கேயும் நடமாட முடியாமல் செய்து விடுவோம் என மாணவியை மிரட்டி அங்கேயிருந்து தப்பி சென்றது.

இது தொடர்பாக கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் 4 பேரை கைது செய்தனர். தப்பிய சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (32), பப்ஸ் கார்த்திக் (28) ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள் கேரளாவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களின் செல்போனில் மாணவியின் ஆபாச போட்டோ, வீடியோ இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவற்றை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாமல் தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இருவரையும் பிடித்து செல்போன்களை பறிமுதல் செய்து விசாரித்தால்தான், ஆபாச வீடியோ, போட்டோ குறித்த தகவல் தெரியும் என போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே கைதான 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விரைவில் கஸ்டடி எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaiheavy29

  வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்