SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலெக்டர் உத்தரவு வந்த பஸ் மோதி நின்றிருந்த பஸ் ஓட்டலுக்குள் புகுந்தது

12/1/2019 6:33:02 AM

திருச்சி, டிச. 1: திருச்சி அருகே சாலையோரமுள்ள ஓட்டலில் சாப்பாட்டிற்காக நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் பின்னால் வந்து மோதியதில் நின்றுகொண்டிருந்த ஆம்னி பஸ் ஓட்டலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில் இருந்து கன்னியாக்குமரிக்கு திருச்சி வழியே ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இதில் நேற்று மதியம் சாப்பாட்டிற்காக திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகமங்கலம் அருகே உள்ள சாலையோரம் உள்ள உணவகத்தில் பஸ்சை நிறுத்தி அனைவரும் சாப்பிட சென்றனர்.

அப்போது சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டல் முன் நின்றிருந்த பஸ்சின் பின்னால் மோதியது. இதில் நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்னால் மோதிய வேகத்தில் ஓட்டலுக்குள் புகுந்தது. இதைக்கண்டு அங்கு நின்றிருந்த பயணிகள் தெறித்து ஓடினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. இதுகுறித்து மணிகண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaiheavy29

    வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

  • carbomb28

    ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

  • molave28

    வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

  • haryana28

    மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

  • water28

    தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்