SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுமக்கள் மறியல் முயற்சி கீழரண் சாலையில் இன்று முதல் பஸ்களை இயக்க வேண்டும்

12/1/2019 6:32:55 AM

திருச்சி, டிச.1: சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது: சாலைகளில் நடமாடும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அபராதம் விதிக்க வேண்டும். என்.எஸ்.பி. சாலையில் தெப்பக்குளம் தென்பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். கீழரண் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி டிச.1 (இன்று) முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனுமதி வழங்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்க வேண்டும். வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கினால் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அணுகு சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வராமல் தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாகவும், உடனே சிகிச்சை அளிக்காமல் விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உறவினர் வந்து பணம் செலுத்தும் வரை சிகிச்சை அளிப்பதில்லை என புகார்கள் வருகிறது. அரசு மருத்துவமனையில் சேர்க்காத 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர்கள் நிஷா, வேதரத்தினம், சப்.கலெக்டர்கள் சிபி.ஆதித்யாசெந்தில்குமார் (ரங்கம்), பத்மஜா(முசிறி) உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaiheavy29

  வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்