ஊட்டி நகர சாலை சீரமைப்பு பணி
12/1/2019 6:22:51 AM
ஊட்டி, டிச. 1: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணி (பேட்ச் ஒர்க்) துவக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்கள், வாகன
ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான சாலைகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல சிரமப்பட்டு வந்தன. எட்டினஸ் சாலை, அப்பர் பஜார் மற்றும் ஏடிசி., பகுதிக்கு செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்து பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன.இச்சாலைகளில் சிறிய வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. குறிப்பாக, இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பழுதடைந்த இச்சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்து வந்தனர்.
உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சாலைகளை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், வாகன ஓட்டுநர்கள் பழுதடைந்த சாலைகளில் பயணிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், இச்சாலைகளில் தற்போது பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.
எட்டினஸ் சாலை, மார்க்கெட், ஏடிசி., - மணிக்கூண்டு சாலைகளில் இருந்த பெரிய அளவிலான பள்ளங்கள் மூடப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. பல நாட்களுக்கு பின் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இச்சாலைகளை சீரமைத்துள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
கல்யாணம், காது குத்து என்ற பெயரில் பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் கடும் நடவடிக்கை
இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். ஆதி கருவண்ணராயர் கோயில் விழா 500 கிடாய் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
நீலகிரியிலிருந்து கேரளா சென்று வர உள்ள கட்டுபாடுகளில் தளர்வு செய்ய கோரிக்கை
கவாத்து செய்யப்பட்ட ரோஜா செடிகளுக்கு உரமிட்டு பராமaரிக்கும் பணிகள் தீவிரம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்