மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது
12/1/2019 6:19:25 AM
மேட்டுப்பாளையம், டிச.1: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 10ம் தேதி முதல் பெய்து வருகிறது.இதன் காரணமாக மலைரயில் பாதையான கல்லார், அடர்லி, இல்குரோ, ரன்னிமேடு மற்றும் குன்னூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் பாதை சேதமடைந்து கடந்த 14ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில் பாதை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை முதல் மேட்டுப்பாளைய-ஊட்டி வரை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. 16 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
குடியிருப்பு பகுதிகளில் குடியரசு தின விழா
பஸ்நிலையத்தில் பழுதான சாலை பயணிகள் கடும் அவதி
தர்பூசணி விலை அதிகரிப்பு
வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு தொழிற்சாலைகளில் மஞ்சி உலர வைக்கும் பணி தீவிரம்
கண்கள் தானம்
72 வது குடியரசு தினவிழா கொண்டாடம் கலெக்டர் தேசிய கொடி ஏற்றி மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!