அமைப்புசாரா நலவாரியங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்
11/29/2019 12:02:44 AM
ஊட்டி, நவ.29: அமைப்பு சாரா நல வாரியங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் இன்று முள்ளிக்கொரையில் நடக்கிறது.இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் கூறியிருப்பதாவது: கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர், அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை தொழிலாளர்கள் முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், கைவிைன ெதாழிலாளர், காலணி தயாரிக்கும் தொழிலாளர், ஓவியர், பொற்கொல்லர், மண்பாண்டத் தொழிலாளர், வீட்டு பணியாளர், பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென 17 நல வாரியங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் கிராமம் தோறும் உறுப்பினர் சேர்க்ைக முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு பதிவு மற்றும் பயனாளிகளுக்கு நல வாரிய அட்டை வழங்கும் முகாம் இன்று (29ம் தேதி) காலை 10 மணி முதல் ஊட்டி அருகேயுள்ள முள்ளிக்கொரை சமுதாய கூடத்தில் நடக்கிறது. நலவாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு கோரும் விண்ணப்பத்தினை உரிய படிவத்தில் இம்முகாமில் நேரில் அளித்து வாரியத்தில் பதிவு செய்து வாரிய நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம். இதற்கு பதிவு கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றொப்பமிட்ட ரேஷன் அட்டை நகல், ஆதார் நகல், வயது குறித்த சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தொழில் பற்றிய சான்றினை உரிய நபர், அலுவலரிடம் விண்ணப்பத்தில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அரசின் பிற துறையின் கீழ் உள்ள வாரியங்கள், திட்டங்கள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு பெற்றவர்கள் பதிவு செய்ய
இயலாது.
மேலும் செய்திகள்
காவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்
பராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்
குன்னூரில் சினிமா படப்பிடிப்புகள் துவக்கம்
அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பாலம் கட்டும் பணி காரணமாக தலைகுந்தாவில் மாற்றுப்பாதை அமைப்பு
10 பேருக்கு கொரோனா
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்