ஆம்னி பஸ், லாரி மோதல்
11/29/2019 12:01:06 AM
உடுமலை,நவ.29:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து கோவைக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று அதிகாலை 5.30 மணியளவில், உடுமலை- பொள்ளாச்சி சாலையில், ராகல்பாவி பிரிவு அருகே வந்தபோது, எதிரே பொள்ளாச்சியில் இருந்து உடுமலைக்கு மக்காச்சோளம் ஏற்றிவந்த லாரியும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதின.இதில் பேருந்தில் பயணித்த காரைக்குடியை சேர்ந்த பழனியப்பன்(41), கமலா ராணி (52), பொள்ளாச்சியை சேர்ந்த லாரி டிரைவர் லோகநாதன்(39), செந்தில்குமார்(55), கோவையை சேர்ந்த கருப்பையா (28), ராஜேஷ்(29), மாலதி(30), ராமநாதபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன்(52), ஆம்னி பேருந்து டிரைவர் ரத்தினவேல் பாண்டியன்(25) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்து சென்ற உடுமலை எஸ்ஐ. ரவி, வழக்குப்பதிந்து, காயமடைந்தவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.
மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு பறக்கும்படை குழு நியமனம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கவன ஈர்ப்பு கூட்டம்
காங்கயம் மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடுமலையில் கிரிக்கெட் போட்டி
திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்