டெய்லரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது
11/28/2019 5:52:23 AM
திருப்பூர், நவ. 28: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சிவா என்கிற பரமசிவம் (33). இவர் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருப்பூர் பி.என். ரோடு திருமலை நகரை சேர்ந்த முகமது ஹக்கீம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமசிவம் எம்.எஸ். நகரிலுள்ள டாஸ்மாக் பார் அருகே சென்றார். அப்போது, அங்கு வந்த முகமது ஹக்கீம் (36) மற்றும் அவரது நண்பர்களான தவுபீக் அக்ரம் (29), மங்கலத்தை சேர்ந்த அஜ்மீர் காஜா (31) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த 3 பேரும் சேர்ந்து பரமசிவத்தின் தலையில் பீர்பாட்டிலால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பரமசிவத்தை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் செய்திகள்
தொட்டபெட்டாவில் சாய்ந்து தொங்கும் மரங்களால் விபத்து அபாயம்
சுற்றுலா பயணிகள் அவதி படகு சவாரி நிறுத்தம் டம்ளர் முடக்கு பகுதியில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ குதிரை பந்தயம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
காபி அவுஸ் பகுதியில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு
தாவரவியல் பூங்கா மாடங்களில் வாடிய தூ லிப் மலர்கள்
கோலனிமட்டம் பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் மாசடையும் நீரோடை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!