கட்டிமேடு அரசு பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம்
11/28/2019 12:03:57 AM
திருத்துறைப்பூண்டி, நவ.28: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் தலைமையாசிரியர் பாலு தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் இளங்கோவன் பேசுகையில், 1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாடி வருகிறோம். டாக்டர் ராஜேந்திரபிரசாத் தலைமையிலும் வரைவு குழு தலைவராக சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலும் எழுதப்பட்டது. இது உலகிலேயே நீளமான அரசியலமைப்பை கொண்டதாகும். நெகிழும் தன்மை, கூட்டாட்சி தன்மை கொண்டதாகும். அரசியலமைப்பின் சிறப்பு கூறுகளுள் ஒன்று சமய சார்பற்றவை ஆகும். நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை அரசாங்கத்தின் நான்கு தூண்களாக செயல்படுவது நமது அரசியல் அமைப்பில் கூறப்பட்ட உன்னதமான சிறப்பு என்று பேசினார். மேலும் இரண்டு வருடம் 11 மாதங்கள் 18 நாட்கள் உலகின் தலைசிறந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி நவம்பர் 26ல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் என்றார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களால் அரசியலமைப்பு தினஉறுதிமொழி எடுத்துக் எடுத்துக் கொண்டனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
தி.பூண்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுகட்ட அடிக்கல் நாட்டு விழா
காடுவெட்டி அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தின கண்காட்சி
குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திருவாரூரில் தர்ணா போராட்டம்
15 இடங்களில் நடந்தது திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் ஆலைகளில் அனுமதியின்றி இயங்கி வந்த 9 போர்வெல்லுக்கு சீல்வைப்பு
செங்காடு கிராமத்திற்கு செல்லும் சாலை படுமோசம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்